/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுபான்மையின ஆணைய தலைவர் 12ம் தேதி கள்ளக்குறிச்சி வருகை
/
சிறுபான்மையின ஆணைய தலைவர் 12ம் தேதி கள்ளக்குறிச்சி வருகை
சிறுபான்மையின ஆணைய தலைவர் 12ம் தேதி கள்ளக்குறிச்சி வருகை
சிறுபான்மையின ஆணைய தலைவர் 12ம் தேதி கள்ளக்குறிச்சி வருகை
ADDED : செப் 01, 2025 11:46 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமையில் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் வரும் 12ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கும் ஆய்வு கூட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் சந்திக்கிறார்.
அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களை கேட்டறிய உள்ளார்.
அப்போது சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையின பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகள், அரசின் திட்டங்கள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.