தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாயமான பீகார் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

 மாயமான பீகார் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

 மாயமான பீகார் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : ஜன 31, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு அருகே மாயமான பீகார் தொழிலாளி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகார் மாநிலம், விஷ்ணுலோரி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராம் மகன் அமர்ஜித்குமார், 23; இவர், சங்கராபுரத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டில் ரட்சகர் என்பவர் வீட்டில் கடந்த சில வாரங்களாக டைல்ஸ் பதிக்கும் வேலை செய்தார். கடந்த 28ம் தேதி ரட்சகர் புதுமனை புகு விழா நடந்தது. அன்று இரவு கட்டட வேலை செய்த பீகார் மாநில வாலிபர்களுக்கு புது வீட்டின் அருகே மது விருந்து நடந்தது. மது போதையில் அங்கிருந்து சென்ற அமர்ஜித்குமார் அங்கிருந்து மாயமானார்.

மறுநாள் 29ம் தேதி, அமர்ஜித்குமாரை கண்டுபிடித்து தர கோரி மூங்கில்துறைப்பட்டு போலீசில் அவரது நண்பர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ரட்சகனின் அண்ணன் ஜான் பீட்டர் கிணற்றில் அமர்ஜித்குமார் இறந்து கிடந்தார்.

இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் அமர்ஜித்குமார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அமர்ஜித்குமார் குடிபோதையில் கிணற்றில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us