/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
2 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசில் புகார்
/
2 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசில் புகார்
ADDED : நவ 10, 2024 05:01 AM
கச்சிராயபாளையம் : சடையம்பட்டு கிராமத்தில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வேலு,42; இவரது மகள் அனிதா, 22; அனிதாவை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உளுந்துார்பேட்டை அடுத்த சித்தாத்துார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அனிதா கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கடந்த 15 நாட்களாக தனது 2 குழந்தைகளுடன் அவரது தாய் வீடான சடையம்பட்டு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாய் வீட்டிலிருந்த அனிதா நேற்று முன்தினம் காலை முதல் 2 குழந்தைகளுடன் மாயமானார்.
இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.