/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூளாங்குறிச்சி பெரிய ஏரிக்கு புதிய வாய்க்கால் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு
/
சூளாங்குறிச்சி பெரிய ஏரிக்கு புதிய வாய்க்கால் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு
சூளாங்குறிச்சி பெரிய ஏரிக்கு புதிய வாய்க்கால் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு
சூளாங்குறிச்சி பெரிய ஏரிக்கு புதிய வாய்க்கால் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : டிச 16, 2024 11:11 PM

ரிஷிவந்தியம்; மணிமுக்தா ஆற்றின் பாசன வாய்க்காலில் இருந்து சூளாங்குறிச்சி பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் புதிய வாய்க்கால் அமைப்பது தொடர்பாக கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர்.
வாணாபுரம் அடுத்த சூளாங்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் இல்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் கனமழை பெய்தும், பெரிய ஏரி தண்ணீரின்றி உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிரமமடைந்தனர். எனவே, மணிமுக்தாற்றின் பாசன வாய்க்காலில் இருந்து புதிய வாய்க்கால் அமைத்து சூளாங்குறிச்சி பெரிய ஏரிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சூளாங்குறிச்சி பெரிய ஏரிக்கு அருகே உள்ள பாசன வாய்க்கால் பகுதியை கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஏரி வரைபடத்தை பார்வையிட்டு, பாசன வாய்க்காலில் இருந்து விளைநில பாதை வழியாக புதிதாக வாய்க்கால் வெட்டுவது, மின்மோட்டார் மூலம் பம்பிங் செய்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வது, சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைத்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் ராஜி, சுரேஷ், சரவணன், செல்வம், ரஞ்சித், வி.ஏ.ஓ., பாக்யராஜ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

