/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
/
ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக அறிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 29, 2025 05:14 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும் என, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் நடந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய விவாதத்தில் அவர் பேசியதாவது:
சட்டசபை தொகுதியின் தலைநகராக உள்ள ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும். அதேபோல, 60 ஊராட்சிகளை கொண்ட, ரிஷிவந்தியம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, அதில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும். 'பெஞ்சல்' புயலால் நிறைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அதிகமான வீடுகளை மாவட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்.
ரிஷிவந்தியம் தொகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டித்தர வேண்டும். திருக்கோவிலுார் ஒன்றியம், செட்டிதாங்கல் ஊராட்சியில் இயங்கும் கால்நடை மற்றும் காய்கறி வாரச்சந்தைக்கு இடம் ஒதுக்கி சுற்றுசுவர் அமைக்க வேண்டும். செங்கனாங்கொல்லை ஊராட்சியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் சட்டசபையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.