/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் விரிவாக்க மையம் ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., திறப்பு
/
வேளாண் விரிவாக்க மையம் ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., திறப்பு
வேளாண் விரிவாக்க மையம் ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., திறப்பு
வேளாண் விரிவாக்க மையம் ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : டிச 20, 2024 11:51 PM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் துணை வேளாண் விரிவாக்க மையத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
ரிஷிவந்தியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், உளுந்துார்பேட்டை நகர சேர்மன் திருநாவுக்கரசு, வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். வேளாண் உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 39.85 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையத்தை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி தலைவர் கிருஷ்ணபிரசாந்த்கிளை செயலாளர் சிவமுருகன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் இதயதுல்லா உட்பட கட்சி நிர்வாகிகள், வேளாண் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

