/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 26, 2025 11:49 PM
சின்னசேலம் : சின்னசேலம் சிறுமலர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
சின்னசேலம் சிறுமலர் துவக்கப் பள்ளியில் நேற்று காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கியமேரி வரவேற்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து நேற்று துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து சிறுமலர் துவக்கப் பள்ளியில் உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதி நிதிகள், மாணவ மாணவி கள் உட்பட பலர் பங்கேற்றனர்.