/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வு மையம் உருவாக்க கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
/
கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வு மையம் உருவாக்க கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வு மையம் உருவாக்க கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வு மையம் உருவாக்க கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : செப் 25, 2025 04:21 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு மையம் உருவாக்க கலெக்டரிடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் பிரசாந்திடம் அளித்த கோரிக்கை மனுவில்;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுத விழுப்புரம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளதால் பெற்றோர் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நீட் தேர்வு மையம் அமையவில்லை. எனவே, நீட் தேர்வு மையம் அமைய பரிந்துரை செய்ய வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி மாவட்ட தலைநகரில் வட்டார வள மைய பயிற்சி கட்டடம் அமைக்க வேண்டும். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சியின் அனைத்து தெருக்களிலும் பெருகியுள்ள தெரு நாய்க்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சியில் பருவ மழைக்கு முன்பாக கழிவு நீர் வாய்காலினை துார்வாரி சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.