/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இயற்கை பேரிடர் அறிய மொபைல் ஆப் அறிமுகம்
/
இயற்கை பேரிடர் அறிய மொபைல் ஆப் அறிமுகம்
ADDED : அக் 23, 2025 11:17 PM
கள்ளக்குறிச்சி: இயற்கை பேரிடர், வானிலை முன்னெச்சரிக்கைகள் அறிந்து கொள்ள அரசின் டி.என்.அலர்ட் மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
இயற்கை பேரிடர் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை செய்திகள் பெறவும் தமிழக அரசு டி.என்.அலர்ட் ஆப் உருவாக்கியுள்ளது.
இதனை மொபைல் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து வானிலை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக நம் மாவட்டத்தின் தற்போதைய வானிலை தகவல், வானிலை முன்னறிவிப்பு, மழை, இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கை, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான வானிலை அறிக்கை, அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு, பெறப்பட்ட மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிற வசிப்பிடப் பகுதிகள் குறித்த விவரங்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கான தகவல்கள் ஆகியவற்றை பெற முடியும்.
பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை பதிவு செய்வதற்கான வசதிகளும் உள்ளன. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் டி.என்.அலர்ட் ஆப் பதவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

