/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குரூப் -4 தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு
/
குரூப் -4 தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு
ADDED : ஜன 30, 2024 06:02 AM
கள்ளக்குறிச்சி, : தமிழ்நாடு தேர்வாணையம் குரூப்-4 போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் 30 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திகுறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் 30 முழு மாதிரி தேர்வுகள் நடத்தட திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாதிரி தேர்வு வரும் 3ம் தேதி காலை 10:00 மணி முதல் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கிறது.
இத்தேர்வு குரூப்-4 தேர்விற்கான முழு பாடத்திட்டத்தை உள்ளடக்கி பாடவாரியாகவும், வகுப்பு வாரியாகவும் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களுடன் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு நாளை 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.