/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சட்டம், ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
/
சட்டம், ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
சட்டம், ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
சட்டம், ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
ADDED : ஆக 29, 2025 02:55 AM

கள்ளக்குறிச்சி: சட்டம் ஒழுங்கு பாதிப்பால் ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகளை கண்டறிந்து தடுத்தல். போராட்டங்கள், அடிப்படை பிரச்னைகள், பொதுமக்குளக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து ஆய்வு செய்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.