/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணி
/
கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணி
ADDED : பிப் 05, 2026 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் பேரூராட்சி சார்பில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.
சங்கராபுரம் நகரில் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, செயல் அலுவலர் சங்கரன் ஆகியோர் உத்தரவின்பேரில் நகரப்பகுதி அனைத்து வார்டுகளிலும் தினசரி கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
தினசரி 2 வார்டுகள் என்ற முறையில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.

