ADDED : நவ 27, 2024 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் அண்ணாமலை,19; இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த 23ம் தேதி மதியம் 2.30 மணியளவில் வீட்டில் இருந்த அண்ணாமலை திடீரென மாயமானார். இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.