/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்
/
மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்
ADDED : ஜன 18, 2024 04:48 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி குணவதி, 25; இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது.
கடந்த 15 ம் தேதி பிரச்னை அதிகமான நிலையில் அன்று மாலை 6:00 மணி அளவில் ஏரவளம் சுடுகாடு அருகே இருக்கும் வேப்ப மரத்தில் குணவதி துாக்கில் இறந்து கிடந்தார்.
மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் அஞ்சலாட்சி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.