ADDED : நவ 01, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தந்தையிடம் கோபித்து சென்ற தாயை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி பிராஞ்சிஸ்காமேரி, 57; கடந்த அக்., 27ம் தேதி திருமண நாளையொட்டி. கணவர் புதிய துணி வாங்கி தராததால் மனைவி பிராஞ்சிஸ்காமேரி கோபமடைந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
தொடர்ந்து பல மணி நேரங்களாகியும் பிராஞ்சிஸ்காமேரி வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் காணவில்லை.
இதுகுறித்து அவரது மகன் ஜோசப்பெர்ணாட்சதீஷ் போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.