/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகள், பேரன் மாயம் தாய் போலீசில் புகார்
/
மகள், பேரன் மாயம் தாய் போலீசில் புகார்
ADDED : நவ 09, 2025 06:28 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மகனுடன் மாயமான தாய் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி தாலுகா, ஈயனுார் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி விஜயலட்சுமி, 30; இவரது மகன் சுதீப், 6; கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் நாராயணசாமியை பிரிந்த விஜயலட்சுமி, தனது மகனுடன், அதே கிராமத்தில் உள்ள தாய் அலமேலு வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த அக்., 2ம் தேதி மகன் சுதீப்புடன் மருத்துவமனைக்கு சென்ற விஜயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் விஜயலட்சுமி, பேரன் சுதீப் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து தரக்கோரி அவரது பாட்டி அலமேலு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

