/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு பிள்ளைகளுடன் தாய் மாயம்: போலிசில் புகார்
/
இரு பிள்ளைகளுடன் தாய் மாயம்: போலிசில் புகார்
ADDED : ஆக 18, 2025 12:30 AM
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே இரு பிள்ளைகளுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப், 40; சென்னையில் வேலை செய்கிறார். இவரது மனைவி கேத்ரின்பாரதி, 34; இவர்களுக்கு ஸ்டாலின்,15; நிதிஷ்ஆண்டோ,14; ஆகிய மகன்களும், மரியாலென்யோ,11; என்ற மகளும் உள்ளனர். பிள்ளைகள் மூவரும் விரியூர் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கடந்த 14ம் தேதி கணவருடன் மனைவி மொபைலில் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த கேத்ரின்பாரதி, அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மகன் நிதிஷ்ஆண்டோ, மகள் மரியாலென்யோ ஆகியோரை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பள்ளி முடிந்து தாமதமாக வீடு திரும்பிய மூத்த மகன் ஸ்டாலின், வீட்டில் தாய், தம்பி மற்றும் தங்கை இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான தாய் உள்ளிட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.