UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:48 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: உலகங்காத்தானில் தாயைக் காணவில்லை என மகள், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தானைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி மகாலட்சுமி, 39; தம்பதிக்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த மகாலட்சுமி வீட்டிலிருந்து வெளியேறி ஆட்டோவில் கள்ளக்குறிச்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகள் யுவராணி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
