/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் மோட்டார் திருட்டு
/
அரசு பள்ளியில் மோட்டார் திருட்டு
ADDED : செப் 20, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: மாதவச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் மோட்டார் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைத்து அதில் நீர் மூழ்கி மோட்டார் அமைத்திருந்தனர்.
இன்று பள்ளி தலைமை ஆசிரியர் போர்வெல் மோட்டாரை இயக்கியபோது தண்ணீர் வரவில்லை.
சந்தேகமடைந்து பார்த்தபோது மின் மோட்டார் மற்றும் ஒயர்கள் திருடு போனது தெரியவந்தது.
தலைமை ஆசிரியர் மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.