/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேல்சிறுவலுார் சாலையில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
/
மேல்சிறுவலுார் சாலையில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
மேல்சிறுவலுார் சாலையில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
மேல்சிறுவலுார் சாலையில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 27, 2025 12:06 AM
மூங்கில்துறைப்பட்டு: அக். 27-: மேல் சிறுவலுாரில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலுார் கூட்ரோட்டில் இருந்து பெருங்களத்துார் செல்லும் சாலையில் மேல் சிறுவலுார் பேருந்து நிறுத்தும் இடத்திற்கு அருகாமையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. சாலையின் இரு புறங்களிலும் குடியிருப்பு வீடுகள் இருப்பதால் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது தண்ணீர் வீட்டுக்குள் படுகிறது. சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.