தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி


UPDATED : நவ 23, 2026 05:56 PM

ADDED : நவ 23, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 05:56 PM ADDED : நவ 23, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி – கள்ளக்குறிச்சி சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் இருந்து சூளாங்குறிச்சி வழியாக பல்லகச்சேரி, வேளானந்தல், பள்ளிப்பட்டு, சித்தால், பழைய சிறுவங்கூர் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் பைக், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர்.

மேலும், கரும்பு, சோளம் உட்பட பல்வேறு வகையான விவசாய பொருட்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் அதிக வாகன போக்குவரத்து உள்ள சாலையாக உள்ளது.

இப்பகுதியில் சூளாங்குறிச்சியில் இருந்து தண்டலை வரை 5 கி.மீ., தொலைவிலான சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சாலை வளைவு பகுதியில் சாலை உள்வாங்கி ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது.

அதேபோல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோர செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. எனவே, சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்யவும், வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அதிகளவு வளர்ந்து சாலையோர செடிகளை வெட்டி அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us