/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரவுண்டானா பணியில் சொதப்பல்; விபத்துகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி
/
ரவுண்டானா பணியில் சொதப்பல்; விபத்துகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி
ரவுண்டானா பணியில் சொதப்பல்; விபத்துகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி
ரவுண்டானா பணியில் சொதப்பல்; விபத்துகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி
ADDED : செப் 11, 2025 11:01 PM
திருக்கோவிலூர்; திருக்கோவிலுார் சந்தப்பேட்டை, தீயணைப்பு நிலைய மும்முனை சந்திப்பில் சாலை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைக்கும் பணி திட்டமிட்டபடி நடக்காததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, தீயணைப்பு நிலையம் அருகே சங்கராபுரம், ஆசனுார் பிரிவு மும்முனை சாலை உள்ளது. மிகவும் குறுகலான இச்சாலையில் அவ்வப்பொழுது விபத்துக்கள் ஏற்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைக்க வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
இதனால், கடந்த ஜனவரி மாதம் ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கி, 8 மாதம் கடந்தும் நடந்து கொண்டுள்ளது. 1 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கினாலும், ரவுண்டானா திட்ட பிளானில் உள்ளபடி சாலை விரிவாக்கம் செய்யாமல், ஆக்கிரமிப்பு அகற்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மெத்தனமாக செயல்பட்டு சாலை அமைத்து வருகிறது.
தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்று, ரவுண்டானா அமைக்க முன்னோட்டமாக மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டது.
ரவுண்டான பகுதியில் போதுமான அகலத்தில் சாலை இல்லாததால், மணல் மூட்டையில் வாகனங்கள் மோதி விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. சொதப்பலான திட்டத்தால் மேலும் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் ரவுண்டானா பணியை நேரில் ஆய்வு செய்து, ஏற்கனவே திட்டமிடப்பட்ட வரைபடத்தின்படி சாலை விரிவாக்கம், ரவுண்டானா அமைக்க வேண்டும்.