/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
/
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
ADDED : பிப் 21, 2025 04:57 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் மலை அடிவாரத்தை குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தியாதுருகம் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க மலை உள்ளது. இந்த மலை மீது  திப்பு சுல்தான் காலத்தின் கோட்டை மற்றும் அக்காலத்தில் பயன்படுத்திய 3 பிரம்மாண்ட பீரங்கிகள் உள்ளன. மலையின் மேற்கு பகுதியில் நுாற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவிலும் அதையொட்டி சமண படுக்கையும் அமைந்துள்ளது.
இதனைப் பார்க்க வரலாற்று ஆர்வலர்கள் அவ்வப்போது மலை மீது சென்று  வருகின்றனர். இந்த மலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலையைச் சுற்றி அந்நியர்கள் அத்துமீறி உள்ளே நுழையாத வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
இந்த கம்பி வேலி தற்போது பல இடங்களில், சேதமாகி அறுந்து கிடக்கிறது. மலையடிவாரத்தில் பெரிய பாறைகளின் இடுக்கில் குகை போன்ற அமைப்புகள் நிறைய உள்ளன.
இப்பகுதியில் குடிமகன்கள் மது அருந்தி போதையில் அங்கேயே  மயங்கி விழுந்து கிடக்கின்றனர்.
சில சமயங்களில் போதை தலைக்கேறி மலையில் உள்ள மரங்களுக்கு தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த  மலை மீது கொலைகள் மற்றும் தற்கொலைகளும்  அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இத குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'குடிமகன்களின் அட்டகாசத்தால், பக்தர்கள் அச்சத்தோடு மலையம்மன் கோவிலுக்கு செல்லும் சூழல் நிலவுகிறது. போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது குடிமகன்களின் கூடாரமாக மலையடிவாரம் மாறியுள்ளது.  வரலாற்று சிறப்புமிக்க மலை மற்றும் அதில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலை பாதுகாக்கும் வகையில் அத்து மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

