ADDED : ஜூன் 19, 2025 07:21 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட மா.கம்யூ., சார்பில் மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும், மக்கள் சந்திப்பு பிரசார இயக்க நடைப்பயணம் நடந்தது.
கள்ளக்குறிச்சி, மந்தைவெளியில் மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம், நடைபயணத்தை துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அதில் வீட்டு வரி, சொத்து, குடிநீர், பாதாள சாக்கடை கட்டண உயர்வுகளை கைவிட வேண்டும்; தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடுகள், குறைபாடுகளை களைந்திட வேண்டும்; ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடின்றி வழங்க வேண்டும்; பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கையை வலியுறுத்தினர்.
இதில் வட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்டாலின்மணி, அருள்தாஸ், மணி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.