/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். இடைக்குழு செயலாளர்கள் மாரிமுத்து, பழனி, சிவாஜி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் ஆனந்தன், ஏழுமலை, சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினர். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்டாலின்மணி, அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

