/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராவுத்தநல்லுாரில் அடிப்படை வசதிகோரி மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்

ADDED : டிச 10, 2025 08:36 AM

சங்கராபுரம்: ராவுத்தநல்லுார் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மா.கம்யூ., சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த ராவுத்தநல்லுார் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் முறையான வடிகால் வாய்க்கால், சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், தெரு மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும். தெருவிளக்கு இல்லாத இடங்களில் புதிதாக மின்விளக்கு அமைத்து தர வேண்டும். ஏரி வாய்க்கால் ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா. கம்யூ., ராவுத்தநல்லுார் கிளை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று காலை ஊர் பொது மக்களுடன் மா.கம்யூ., கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் ஜமில் உசேன் தலைமை தாங்கினார்.
ஜான்பாஷா, ஜாபர், நுாருல்லா, நிசார், இர்பான் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு ஆனந்தன், ஒன்றிய குழு பாஸ்கர், சக்திவேல், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் சிவாஜி, பச்சையப்பன் ஆகியோர் பேசினர்.