ADDED : செப் 25, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியத்தில் தங்கையை காணவில்லை என, அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் அன்னியப்பன் மனைவி கோவிந்தம்மாள்,38; இருவருக்கும் 15 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், குழந்தை இல்லை. கருத்து வேறுபாட்டினால் கடந்த சில வருடங்களுக்கு முன் அன்னியப்பனை பிரிந்த மனைவி கோவிந்தம்மாள் சகோதரர் அஞ்சாமணியுடன் வசித்து ஆடு மேய்த்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்ற கோவிந்தம்மாள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அஞ்சாமணி அளித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.