ADDED : ஏப் 23, 2025 05:51 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே, மர்மமான முறையில் இறந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆதனூர், மேட்டுக்குப்பத்தை சேர்ந்த முருகன் மனைவி ரேவதி, 22; இந்த இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஓராண்டு வரை சேர்ந்து வாழ்ந்தனர். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால், கணவரை பிரிந்து பிரம்மகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு ரேவதி சென்று விட்டார்.
அங்கு ஐந்தாண்டுகள் தங்கி இருந்தவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு, கடந்த 19ஆம் தேதி கணவர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், அங்கு மர்மமான முறையில் இறந்தார்.
இது குறித்து ரேவதியின் தாய் இந்திராணி மகள் சாவில், கணவர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளதாக,மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

