/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண் ஆட்டோ ஓட்டுனர் மர்ம சாவு
/
பெண் ஆட்டோ ஓட்டுனர் மர்ம சாவு
ADDED : ஆக 13, 2025 12:18 AM
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த பீளமேடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி மலர், 44; ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது கணவரைப் பிரிந்து தியாகதுருகம் கிருஷ்ணா நகரில் உள்ள முரளி என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மகள் கல்பனா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டில் மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கல்பனா கொடுத்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து மலரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மலர் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.