/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூலித்தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்
/
கூலித்தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்
ADDED : ஏப் 30, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அடுத்த மாத்துாரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன், 38; விவசாய கூலி. இவரை நேற்று முன்தினம் எடுத்துவாய்நத்தம் சாலையில் முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள், இரும்பால் தலை, முகத்தில் தாக்கி தப்பி சென்றனர்.
அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.