/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ்களில் தமிழ்நாடு என எழுதி போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
/
அரசு பஸ்களில் தமிழ்நாடு என எழுதி போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
அரசு பஸ்களில் தமிழ்நாடு என எழுதி போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
அரசு பஸ்களில் தமிழ்நாடு என எழுதி போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
ADDED : ஜன 04, 2026 03:47 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு பஸ்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ளது போல், தமிழக அரசு பஸ்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமை தாங்கினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், தேசிங்கு, மண்டல செயலாளர் அக்ரி மணிகண்டன், உழவர் பாசறை பிரிவு மாயவன், வக்கீல் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கோட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 10க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டியதுடன், பெயிண்ட் ஸ்பிரேயரால் தமிழ்நாடு என எழுதினர்.
தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 44 நபர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் கைது செய்தனர்.

