
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று நாக சதுர்த்தி பூஜை நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 7:30 மணியளவில், ஒரு கிலோ மஞ்சள் துாளில் கவுரி தேவியை ஆவாஹணம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 11:30 மணி வரை பூஜை நடந்தது.
கவுரி ஸ்தோத்திரம், நாகராஜ ஸ்தோத்திரம் பூஜித்து நோன்பு கயிறு அணிந்து மகா தீபாராதனை நடந்தது. வழிபாட்டினை முரளி சர்மா செய்து வைத்தார். பூஜையில் வாசவி விபாக், வனிதா கிளாப், வைசிய சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர்.

