/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்
/
பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்
ADDED : ஜன 20, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் முடிந்துள்ளது.
அதனை தொடர்ந்து கோவிலில் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் அளிக்கும் ஐதீகம் நேற்று மாலை நடந்தது.
பெருமாள், ஆழ்வார்கள் உற்சவ சாமிக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஆழ்வார்கள் மற்றும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். சாற்றுப்படி சேவை, ஆராதனம் செய்யப்பட்டது. வழிபாடுகளை தேசிக பட்டர் செய்திருந்தார்.