தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பி.எஸ்.என்.எல்., டவரால் பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பி.எஸ்.என்.எல்., டவரால் பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பி.எஸ்.என்.எல்., டவரால் பாதிப்பு


ADDED : செப் 24, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பி.எஸ்.என்.எல்., மைக்ரோவேவ் டிரான்ஸ்மீட்டர் டவர் பல ஆண்டுகளாக துருப்பிடித்து உடைந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. இதனை விபத்துக்கு முன் அங்கிருந்த அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த 2000ம் ஆண்டில், சென்னையிலிருந்து கோவை வழியாக கேரளா பகுதிகளுக்கு பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை இணைப்பதற்காக திண்டிவனம், விழுப்புரம், உளுந்துார்பேட்டை, நாகலுார், தச்சூர், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மைக்ரோவேவ் டிரான்ஸ்மீட்டர் டவர்கள் அமைக்கப்பட்டு தொலைத்தொடர்பு இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன.அதற்காக தச்சூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பி.எஸ்.என்.எல்., மைக்ரோ வேவ் டிரான்ஸ்மீட்டர் அலுவலகத்தில் 80 மீ., உயரத்திற்கு டவர் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன.  

ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் அனைத்தும் மைக்ரோவேவ் முறைக்கு பதிலாக ஆப்டிகல் பைபர் கேபிள் முறைக்கு மாறியது. இதனால் மைக்ரோவேவ் டிரான்ஸ்மீட்டர் டவர்கள் பயனற்று போனது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த 80 மீ., உயரம் கொண்ட டிரான்ஸ்மீட்டர் டவர்களும், அதன் கட்டுப்பாட்டு அறைகளும் காட்சி பொருளாக மாறின.  

அதன்படி கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள டிரான்ஸ்மீட்டர் டவர் மற்றும் அதன் அலுவலகம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பயனற்று கிடந்தது. தற்போது கட்டுப்பாட்டு அறையின் ஒரு பகுதியை டெலிபோன் எக்ஸ்சேஞ் ஆகவும் மற்ற பகுதிகள் தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குனர் அலுவலகத்திற்கும் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. 

தேசிய நெடுஞ்சாலையோரம் வாகன ஓட்டிகளை அச்சுருத்தும் வகையில் ஆபத்தாக உள்ள துருப்பிடித்த டவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us