/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதியதாக கட்டப்படும் மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை இயக்குனர் ஆய்வு
/
புதியதாக கட்டப்படும் மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை இயக்குனர் ஆய்வு
புதியதாக கட்டப்படும் மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை இயக்குனர் ஆய்வு
புதியதாக கட்டப்படும் மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை இயக்குனர் ஆய்வு
ADDED : செப் 23, 2024 07:47 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி வரை இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
மூங்கில்துறைப்பட்டில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை நேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறை இயக்குனர் சரவணன் ஆய்வு மேற்கொண்டு, பாலம் பணியின் தரத்தினை உறுதி செய்ய பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்ட பொறியாளர் சரவணன், கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் நாகராஜன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.