/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய கயிறு தாண்டுதல் போட்டி; மாணவ, மாணவியர் சாதனை
/
தேசிய கயிறு தாண்டுதல் போட்டி; மாணவ, மாணவியர் சாதனை
தேசிய கயிறு தாண்டுதல் போட்டி; மாணவ, மாணவியர் சாதனை
தேசிய கயிறு தாண்டுதல் போட்டி; மாணவ, மாணவியர் சாதனை
ADDED : செப் 20, 2024 09:51 PM

சங்கராபுரம் : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய கயிறு தாண்டுதல் போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள யஷ்வந்த் மகா வித்யாலயா பள்ளியில் 21வது சப் ஜூனியர் ஜம்ப் ரோப் தேசிய சாம்பியன்ஷிப், 3வது அகில இந்திய ஜம்ப் ரோப் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
போட்டியில், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ஜம்மு காஷ்மீர், டில்லி, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் தலைமையில் 19 மாணவ, மாணவியர் தமிழ்நாடு சார்பில் 7 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.
மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பில் 3ம் இடம் பெற்றது.
இப் போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் சாய்சரன், நிகில், வைஷ்ணவி, நிஷாலினி, ராகவர்ஷனி ஆகியோர் 3 தங்கம் 1 வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை மாணவ, மாணவியர்களை தமிழ்நாடு மாநில கயிறு தாண்டுதல் சங்க செயலாளர் சுகுமாறன், பயிற்சியாளர் சூரியமுர்த்தி பாராட்டினர்.