/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
/
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
ADDED : அக் 27, 2024 11:29 PM

கள்ளக்குறிச்சி: மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் தொழில்நுட்ப கல்லுாரியில் 'ட்ரோன்' தொழில் நுட்பத்தின் சமூக நன்மை மற்றும் அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு, கல்விக் குழும செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஈஸ்வரன் தங்கராசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழில்நுட்பக் கழக மின் பொறியியல் துறை பேராசிரியர்கள் செந்தில்குமார், விக்னேஷ்குமார், சென்னை கருட ஏரோபேஸ் மூத்த ஆராய்ச்சியாளர் ரமேஷ்குமார் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில், 'ட்ரோன்' வடிவமைத்தல், உற்பத்தி செய்யும் நிறுவனம், சமூக நன்மை, பயன்பாடுகள், விவசாயம், பாதுகாப்பு மற்றும் பேரிடர் கண்டறிதல், நேர்மறையான தாக்கத்தை ஆராய்தல், வான்வழி நுண்ணறிவு உட்பட பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
தொடர்ந்து, ட்ரோன் கேமராவை இயக்குவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பேராசிரியர்கள் சுரேஷ், ராஜேஸ்வரி, முகுந்தன், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.