/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கலை கல்லுாரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை
/
ஆர்.கே.எஸ்., கலை கல்லுாரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை
ஆர்.கே.எஸ்., கலை கல்லுாரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை
ஆர்.கே.எஸ்., கலை கல்லுாரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை
ADDED : பிப் 21, 2024 01:39 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினார். வேதியியல் துறைத்தலைவர் அகமதுசுல்தான் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பூனே பிரதிபா கல்லுாரி ஆராய்ச்சி தலைவரும், வேதியியல் துறை உதவி பேராசிரியருமான யோகேஷ்ஜோராபூர், தந்தை ஹான்ஸ்ரோவர் கல்லுாரி உதவி பேராசிரியர் ராமநாதன், பெங்களூரு ராமய்யா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரசுராமன் ஆகியோர் பங்கேற்று, மூலக்கூறு நறுக்குதலுக்கு தொடர்புடைய மென்பொருட்கள், கெம்ட்ரா- ஆட்டோடாக் பதிவிறக்கம் பயன்படுத்துதல் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் வெங்கடேசன், அங்கமுத்து, ராமர், மாரியப்பிள்ளை, சக்திவேல், ராஜதுரை ஆகியோர் செய்தனர். சங்கீதா நன்றி கூறினார்.

