தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா


UPDATED : நவ 21, 2026 08:12 PM

ADDED : நவ 21, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 08:12 PM ADDED : நவ 21, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மைய நுாலகத்தில் 59வது தேசிய நுாலக வார விழா நடந்தது.

விழாவிற்கு முதல் நிலை நுாலகர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நுாலக வாசகர் வட்ட குழு தலைவர் டாக்டர் உதயகுமார் முன்னிலை வகித்தார். கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன், கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட மைய நுாலகர் காசிம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர் கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நுாலகப் பொறுப்பாசிரியர் தேவி மயில் நுாலகத்தின் முக்கியத்துவம் மற்றும் வாசிப்பின் மேன்மை குறித்து பேசினர்.

அரசின் நல் நுாலகர் பட்டம் பெற்ற எடுத்தவாய்நத்தம் நுாலகர் தர்மலிங்கம் கவுரவிக்கப்பட்டார். மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. புதிய நுாலக உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கை நடந்தது.

ஆசிரியர்கள் அண்ணாதுரை, அருணா மற்றும் மாவட்டத்தில் உள்ள கிளை நுாலகர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us