/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் தேசிய லோக் அதாலத் 1,402 வழக்குகள் ரூ. 11.46 கோடிக்கு தீர்வு

ADDED : செப் 15, 2025 02:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 1,402 வழக்குகளில், ரூ.1 1.46 கோடிக்கு தீர்வு காணப்பட்டன.
கள்ளக்குறிச்சி கோர்ட் வளாகத்தில், சட்டப் பணிகள் குழு சார்பில் வாகன விபத்து, சிவில், வங்கி காசோலை வழக்குகளுக்கான தேசிய லோக் அதாலத் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி சையத் பர்கத்துல்லா, தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயவேல், முதன்மை சார்பு நீதிப தி மைதிலி முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வழக்காளிகளுக்கு இழப்பீடு தொகைக்கான காசோலைகளை வழங்கி பேசுகையில்;
சின்னசேலம், கல்வராயன்மலையில் இம்மாதத்தில் புதிய கோர்ட் பணிகள் துவங்கப்படும். வழக்காளிகளின் நன்மை வேண்டி, இனி வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார். திருமண முறிவு கேட்டு மனு தாக்கல் செய்திருந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழ்வதற்கான உத்தரவினை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து நடந்த லோக் அதாலத்தில், மொத்தம் 1,402 வழக்குகள், 11 கோடியே 46 லட்சத்து 17 ஆயிரத்து 405 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டன. நீதிபதிகள் பாலாஜி, ரீனா, ஹரிஹரசுதன், பானுமதி, காந்திபிரியா, வக்கீல் சங்க தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.