/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
/
திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
ADDED : செப் 30, 2025 02:34 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஞானானந்த தபோவனத்தில் சரத் நவராத்திரி விழாவின் 7ம் நாளான நேற்று முன்தினம் ஞானாம்பிகை கார்த்தியாயினி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலுார், தபோவனத்தில் அமைந்துள்ள ஞானானந்தகிரி சுவாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் சரத் நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று முன்தினம் காலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் மகாமேருவிற்கு லட்சார்ச்சனை, சக்ரநவாவரண பூஜை, சுவாசினி பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு துர்கா சப்தசதி பாராயணம், லலிதா சகஸ்ரநாம குங்குமார்ச்சனை, ஸ்ரீவித்யா நவாவரண, ஸ்ரீ சக்கர பூஜை ஞானாம்பிகைக்கு கார்த்தியாயினி அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 1ம் தேதி மதியம் 12:00 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாஹூதி, 2ம் தேதி சுஹாசினி பூஜை, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்சாட்சனை பூர்த்தி, அதிர்ஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.