/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் பா.ஜ., கூட்டம் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
/
கள்ளக்குறிச்சியில் பா.ஜ., கூட்டம் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் பா.ஜ., கூட்டம் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் பா.ஜ., கூட்டம் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
ADDED : டிச 03, 2025 06:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பா.ஜ., சார்பில், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர்கள் கார்த்தியாயினி, முருகானந்தம், மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேலுபாபு, பிரபு, ஐ.ஜே.கே., வெங்கடேசன், த.மா.கா., கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர்கள் மில் ஹரி, முருகன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட செயலாளர்கள் சதீஷ்குமார், முத்து, கோவிந்தசாமி, மாவட்ட தலைவர்கள் தொழில் பிரிவு கண்ணன், சிறுபான்மை பிரிவு தேவசந்திரகுமார், கல்வியாளர் பிரிவு சரவணன், இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீராம்சுவாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட துணை தலைவர்கள் செந்தில்குமார், கோவிந்தன், கள்ளக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

