/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நேரு யுவகேந்திரா இளையோர் திருவிழா
/
நேரு யுவகேந்திரா இளையோர் திருவிழா
ADDED : டிச 19, 2024 12:56 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட அளவில் நடைபெறும் நேரு யுவகேந்திரா இளையோர் திருவிழா நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சக்திவேல் வரவேற்றார். விழுப்புரம் நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ராமச்சந்திரன் நோக்க உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.. தமிழ்த்துறை தலைவி பீரவீனா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜா, ேஹமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர். கணக்காளர் கணேசன் நன்றி கூறினார்.