/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய தொழில் நிறுவனங்கள்: கலெக்டர் அறிவுறுத்தல்
/
புதிய தொழில் நிறுவனங்கள்: கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மார் 19, 2025 05:25 AM
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திட, புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில், புதிதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்க அரசு துறைகளுடன், கலெக்டர் பிரசாந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தேவைப்படும் தலைமை சான்று, ஒப்புதல் சான்று மற்றும் அனுமதி சான்று உள்ளிட்டவைகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சிட்கோ தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகளை தேவைப்படும் தொழில் முனைவோருக்கு விரைவில் ஒதுக்கீடு செய்யவும், அதிகளவிலான தொழில் கடன்களை வழங்கவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் கலெக்டர் பிரசாந்த் கூறுகையில், 'மாவட்டம் தொழில் துறையில் முன்னேற்றம் அடைய, வேலை வாய்ப்பினை அதிகப்படுத்த வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நிறுவிட இளைஞர்கள் முன்வர வேண்டும்,'என்றார்.
இந்த கூட்டத்தில் தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.