/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
புதிய கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு
புதிய கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு
புதிய கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜன 19, 2025 06:34 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : கல் அரவை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஜல்லி  கற்கள், எம்.சேண்ட், பி.சேண்ட், டஸ்ட் பவுடர் ஆகியவற்றை இருப்பு வைத்து பயன்படுத்திட கனிம சேமிப்பு கிடங்கு உரிமம் பெற வேண்டும். இதற்காக, உரிமம் கோரும் புல எண்ணின் வரைபடம், கூட்டு வரைபடம், பட்டா, சிட்டா, அடங்கல், 'அ' பதிவேடு ஆகியவற்றின் நகல்களுடன், விண்ணப்பக் கட்டணம் ரூ.10 ஆயிரம் உரிய அரசு கணக்கு தலைப்பின் கீழ் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய ரசீதுடன், இந்திய சுரங்க மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் பெற்ற அறிக்கையுடன், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முகவரி சான்று இணைத்து ஆவணத்தை பூர்த்தி செய்து, கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
கல் அரவை தொழிற்சாலைகளில் அரைக்கப்படும் ஜல்லி கற்கள், எம்.சேண்ட், பி.சேண்ட், டஸ்ட் பவுடர் மற்றும் கற்கள் மெருகூட்டும் தொழிற்சாலைகளில் உள்ள கனிமங்கள் விற்பனை செய்யவும், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றுவதற்கும் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் உரிய அனுமதி நடைச்சீட்டு பெற்று எடுத்து செல்ல வேண்டும்.
அவ்வாறு, விதிகளை பின்பற்றாமல் இயங்கும் நிறுவனங்களின் மீது அரசு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான கூடுதல் விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

