/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் புதிய அஞ்சல் துணை அலுவலகம் திறப்பு
/
கள்ளக்குறிச்சியில் புதிய அஞ்சல் துணை அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சியில் புதிய அஞ்சல் துணை அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சியில் புதிய அஞ்சல் துணை அலுவலகம் திறப்பு
ADDED : ஜன 23, 2026 06:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய அஞ்சல் துணை அலுவலகத்தை எம்.பி., திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு நீலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பெருவங்கூர் சாலையில், கள்ளக்குறிச்சி கிழக்கு துணை அஞ்சலம் நிலையம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தலைமை தாங்கினார். விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
விழாவில் மலையரசன் எம்.பி., சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய அஞ்சலகத்தை திறந்து வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் மணியார்டர் மூலம் அனுப்பி வைத்து பேசினார். விழாவில் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். மேலும் புதிய அஞ்சலகம் மூலம் அஞ்சலக சேவைகளான சிறுசேமிப்பு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஆதார் மற்றும் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

