/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய தார் சாலை பணி: ரூ.2 கோடியில் துவக்கம்
/
புதிய தார் சாலை பணி: ரூ.2 கோடியில் துவக்கம்
ADDED : மார் 30, 2025 04:37 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே, ரூ.2 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
சங்கராபரம் அடுத்த கல்வராயன் மலை, புதுபாலப்பட்டு - கள்ளிப்பட்டு கிராம தார்ச்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், குண்டும் குழியுமாக இருந்தது.
இதனால், புதிய தார் சாலை அமைக்க, ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையொட்டி, அங்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
ஒன்றிய சேர்மன் சந்திரன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சாரதா சின்னையன் வரவேற்றார். ஒன்றிய குழு துணை தலைவர் பாட்ஷா பீ முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர், உதயசூரியன் எம்.எல்.ஏ., பணியை துவக்கி வைத்தார்.
இதில், தி.மு.க,.வினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.