/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காளி கோவிலில் நிகும்பலா யாகம்
/
காளி கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED : ஜூன் 26, 2025 02:42 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.,நகர் பகுதியில் உள்ள பத்ர காளியம்மன் கோவிலில், ஆனி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, இரவு 7:00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து அம்பாளுக்கு தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேலும் கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மனுக்குமகா தீபாராதனை நடந்தது.
இதையடுத்து, பத்ரகாளி கவசம் பாடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிளகாய் வற்றலை யாக தீயில் சேர்த்து நிகும்பலா யாகம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் செய்திருந்தார்.