
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் மற்றும் நிகும்பலா யாகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பின்பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி என்கின்ற பத்ரகாளியம்மன் கோவிலில் தை அமாவாசையொட்டி, நேற்று இரவு 7:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, சுவாமிக்கு தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
பத்ரகாளி கவசம் பாடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிளகாய் வற்றல் மூலம் நிகும்பலா யாகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் செய்திருந்தார்.

