ADDED : ஏப் 18, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வட மாநில இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம், இந்திரானா பகுதியை சேர்ந்த மால்சிங் மகன் சந்தன்சிங்,18; இவர் கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.